தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தொடர்பாக விவாதிக்க, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம் (Vijay’s MPs Meet) இன்று மாலை நடைபெற உள்ளது.
Vijay’s MPs Meet: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை
மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட மசோதாவை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தவெகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. இதனால், முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் எம்.பிக்கள் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.
தேமுதிகவும் பங்கேற்கவில்லை எத்தனை எம்.பிக்கள் ?
தேமுதிகவும் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், இதனை புறக்கணிப்பு எனக் கூறாமல், தான் டெல்லியில் இருப்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 57 எம்.பிக்கள் உள்ளனர். இதில் 39 பேர் மக்களவை உறுப்பினர்களும், 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களும் ஆவர். திமுகவுக்கு 30 எம்.பிக்களும், அதிமுகவுக்கு 4 எம்.பிக்களும் உள்ளனர். பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி. உள்ளார். மீதமுள்ள 20 பேர் தவெக ஆதரவாளர்களாக குறிப்பிடப்படுகின்றனர்.

