பட்ஜெட் கூட்டத்தொடர் – சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

TN Budget session

இன்றைய தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதங்கள் அரங்கேறின.

TN Budget Session

பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும் பதிலடிகளையும் முன்வைத்ததால் அவை முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விஜய் – உதய் மோதல்

மேகதாது அணை விவகாரம் தொடர்பான விவாதத்தின் போது, குறுவை சாகுபடிக்கான இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், குறுவை சாகுபடிக்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும், உண்மை நிலவரத்தை அறிய செய்தித்தாள்களை தொடர்ந்து படிக்கும் பழக்கம் அவசியம் என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், அரசு வழங்கியது வறட்சி நிவாரணம் அல்ல, சிறப்பு தொகுப்பு மட்டுமே என்றும், செய்தித்தாள் படிப்பதை விட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவசாயிகளின் கருத்தைக் கேட்பதே முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

ஆதவ் – உதய் மோதல்

அதைத் தொடர்ந்து டாஸ்மாக் மற்றும் சாராய ஆலைகள் தொடர்பான விவாதமும் அவையில் சூடு பிடித்தது. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சாராய ஆலைகளை நடத்துபவர்கள் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், லாட்டரி நிறுவனம் ஒன்றிடமிருந்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்கொடை பெற்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அந்த லாட்டரி நிறுவனத்தை நடத்துபவர் ஆதவ் அர்ஜூனாவின் மாமனார் என்பதால், அதற்கான விளக்கத்தை அவரிடமே கேட்கலாம் என்று கூறினார்.

அதற்கு ஆதவ் அர்ஜூனா, அது அவருடைய மாமனாருக்கும் உதயநிதியின் தந்தைக்கும் இடையிலான விவகாரம் என்றும், அதற்கான பதிலை வீட்டிற்குச் சென்று கேட்கலாம் என்றும் கூறியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இவ்வாறு இன்றைய சட்டசபை கூட்டம் முழுவதும் அனல் பறக்கும் வாத–பிரதிவாதங்களால் பரபரப்பாக அமைந்தது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

 

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts