இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முதலாக ஹீரோவாக நடித்துள்ள DC திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Captain Miller புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், Sun Pictures தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் கிளாசிக் தேவதாஸ் கதை நவீன கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ளது.
DC விமர்சனம்
போலீஸ்காரரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகும் தேவதாஸாக லோகேஷ் கனகராஜ் வருகிறார். பெற்றோரால் விற்கப்பட்டு சிக்கிக்கொள்ளும் சந்திராவாக வாமிகா கபி நடித்துள்ளார். சட்டத்திடம் இருந்து தப்பிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதியாக வருகிறார்.
பழிவாங்கல், வன்முறை மற்றும் காதல் கலந்த கதைக்களம்.படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ஸ்டைல். கருப்பு-வெள்ளை காட்சிகள், Raw-வான சண்டைகள், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் சினிமா என அவரது Signature தெளிவாக தெரிகிறது.
அனிருத் ரவிச்சந்திரனின் பின்னணி இசை படத்தை தூக்கி நிற்கிறது. .நடிப்பில் லோகேஷின் அறிமுகம் Intense-ஆக உள்ளது.
ஆனால் வாமிகா கபிதான் படத்தின் உயிர். அவரது நடிப்பும் லோகேஷுடனான Chemistry-ம் Highlight. ஆனால் மெதுவான திரைக்கதை மற்றும் அதிகப்படியான வன்முறை சில இடங்களில் சோர்வை தருகிறது. மொத்தத்தில் DC என்பது விஷுவல் விருந்து தரும் டார்க் ரொமான்ஸ். லோகேஷ் மற்றும் அருண் ரசிகர்களுக்கான One-time Watch.

