விளம்பரம்:


12,000 திரையரங்குகளில் ‘Toxic’.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்!

Toxic

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘Toxic’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 12,000 திரைகளில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யஷின் பிரம்மாண்ட படம்

‘KGF’ படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற யஷ், ‘Toxic’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விளம்பரம்:


நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோவா மாபியா பின்னணி

1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஏ’ சான்றிதழ்

வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், ‘Toxic’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தின் ஓட்ட நேரம் சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


நாளை முன்பதிவு

படத்தின் முன்பதிவு நாளை முன்பதிவு தொடங்க உள்ளது. சுமார் 12,000 திரைகளில் உலகளவில் படத்தை வெளியிடுவதற்கான திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இறுதி திரை எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இவ்வளவு பிரம்மாண்டமான வெளியீடு யஷின் ‘டாக்ஸிக்’ படத்திற்கு எந்த அளவிலான தொடக்க வசூலை பெற்றுத்தரும் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts