மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து, வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
கும்பாபிஷேகத்தை பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் காணும் வகையில் கோவிலின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பக்தர்களை நேரடியாக அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்இடி திரைகள் அமைப்பு
கோவிலுக்குள் செல்ல முடியாத பொதுமக்களும் கும்பாபிஷேக நிகழ்வை காணும் வகையில், கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகன்ற எல்இடி திரைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விழா நாளில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


[…] பிறகு நடைபெற உள்ள இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என […]