மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: பத்திரிகை வெளியீடு!!

Meenakshi Amman

Meenakshi Amman Temple: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது.

 செப்டம்பர் 17-ல் மகா கும்பாபிஷேகம்

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17, 2026 அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளது. அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் மூலஸ்தான கும்பாபிஷேகம் காலை 7.55 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும் காலை 7.40 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

யாகசாலை பூஜைகள் எப்போது?

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. செப்டம்பர் 6-ம் தேதி கும்பாபிஷேகப் பூஜைகள் தொடங்குகின்றன.

  • செப்டம்பர் 7 மற்றும் 8 நவகோள் யாகவேள்வி மற்றும் வாஸ்து சாந்தி நடைபெறும்.
  • செப்டம்பர் 9  வைகை ஆற்றிலிருந்து புனித நீர் மற்றும் மண் எடுக்கப்படும்.
  • செப்டம்பர் 11  முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. மொத்தம் 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கான நுழைவு வழிகளை ஒழுங்குபடுத்தவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக தடையற்ற குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பக்தர்களுக்காக கூடுதல் வசதிகள்

சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் கூடுதல் தற்காலிக இலவச காலணி பாதுகாப்பகங்கள் அமைக்கவும், கும்பாபிஷேக நிகழ்வுகளை பக்தர்கள் நேரடியாகக் காணும் வகையில் முக்கிய இடங்களில் LED திரைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்துதல், மின்மாற்றிகளைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல், பழுதான மின்விளக்குகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளையும் விரைந்து மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சாலைகள், குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள்

கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் மற்றும் வீதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், மாசி வீதிகளில் குடிநீர், கழிப்பறை, நடைபாதை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் மற்றும் தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts