அறுவடை தொடங்கும் முன் குறுவை தொகுப்பு நிதியை வழங்குக: விவசாயிகள் கோரிக்கை

Farmers Demand

தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடி மேற்கொண்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு தொகுப்பு நிதி இதுவரை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த ஆண்டு ரூ.134.83 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. இதன் கீழ் இயந்திர நடவு உள்ளிட்ட சாகுபடி பணிகளுக்கு ஊக்கத்தொகை, உரங்கள் மற்றும் இடுபொருட்களுக்கான உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், இயந்திரம் மூலம் நடவு செய்ததற்கான ரசீது, கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், கணினி சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் வேளாண்மைத் துறை அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளனர்.

இரண்டு மாதங்களாகியும் நிதி வரவில்லை

குறுவை தொகுப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், அரசாணை வெளியாகி சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய தொகை வங்கிக் கணக்கில் இன்னும் வரவு வைக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறுவை சாகுபடி பணிகள் நிறைவடைந்து, அடுத்த மாதம் முதல் அறுவடை தொடங்கும் நிலையில் நிதி கிடைக்காதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உடனடியாக நிதியை வழங்க கோரிக்கை

காவிரி உரிமை விவசாயிகள் தரப்பில், திட்டம் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நிதியை விரைந்து செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குறுவை தொகுப்பு திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகை விரைவில் செலுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.57.33 கோடியும் என மொத்தம் ரூ.134.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts