விளம்பரம்:


ஜெயிலர் 2 படத்தின் ‘அல்ல போலேலோ’ பாடல் வெளியானது !

Jailer 2

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான *‘அல்ல போலேலோ’* வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மீண்டும் இணைந்த ரஜினி – நெல்சன் கூட்டணி

விளம்பரம்:


கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் கூட்டணியில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

நட்சத்திர பட்டாளம்

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விளம்பரம்:


‘அல்ல போலேலோ’ பாடல் ரிலீஸ்

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படும் இப்படம், அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘அல்ல போலேலோ’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பாடல் வெளியானதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், ‘ஜெயிலர் 2’ படத்தின் ஓடிடி உரிமை ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts