யூடியூபர் விஜே சித்து இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் – டீசர் வெளியீட்டு நேரத்தை அறிவித்த படக்குழு!
பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, படத்தின் டீசர் நாளை (நவம்பர் 3) மாலை 3 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
விஜே சித்து இயக்கி நடித்துள்ள படம்
யூடியூப் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான விஜே சித்து, தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். அவர் எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘டயங்கரம்’.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களில் யார் யார்?
‘டயங்கரம்’ திரைப்படத்தில் நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டா பிரபலம் மல்லேஷ் கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்புப் பணிகளை பிரதீப் இ. ராகவ் கவனித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக கடந்த ஜூலை மாதம் படக்குழு சிறப்பு காணொளி வெளியிட்டு அறிவித்திருந்தது.
தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது டீசர் வெளியீட்டுத் தேதியும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசர் எப்போது வெளியாகிறது?
‘டயங்கரம்’ படத்தின் டீசர் நவம்பர் 3-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, விஜே சித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். தற்போது இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அவர் களமிறங்கியுள்ளதால், ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

