ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது நடவடிக்கை: சிங்கப்பெண் சிறப்புப் படை அதிரடி

Singapenn Force

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் *சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை*, கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 14 முதல் 20-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

272 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்புப் படையின் களப்பிரிவுகள், ஒரே வாரத்தில் பெறப்பட்ட 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை* மேற்கொண்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக *20 குற்ற வழக்குகள் பதிவு செய்ய* நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன *2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள்* கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் *3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்* நடத்தப்பட்டுள்ளன. அதேபோல், குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்ட *12,577 பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள்* தீவிரப்படுத்தப்பட்டன.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

குழந்தைகள் பாதுகாப்பிலும் கவனம்

கடந்த ஒரு வாரத்தில் அறிவுசார் குறைபாடுடைய *5 பேர் மீட்கப்பட்டு*, அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், *3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய **53 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்*. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்புப் படை தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts