விளம்பரம்:


Gold Rate | தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Gold rate

தங்கம் விலை (Gold Rate) தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 5-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

விளம்பரம்:


இன்றைய தங்கம் விலை 

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,710 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.1,17,680 ஆக உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை

விளம்பரம்:


இதற்கிடையில், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 5 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது, தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் கவனத்தையும் அதிகரித்துள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts