Shaking Well | குஜராத்தில் அசைந்தாடும் கிணறு – காரணம் என்ன?

Shaking well

குஜராத் மாநிலத்தில் ஒரு கிணற்றின் தண்ணீர் நிற்காமல் அசைந்துகொண்டே இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

குஜராத்தின் வீரபத்ரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ப்ரன் ஜீவன் சதாரியா, 3 மாதங்களுக்கு முன்பு தனது நிலத்தில் ஒரு பெரிய கிணறு தோண்டினார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

அசைந்தாடும் கிணறு (Shaking Well)

ஆகஸ்ட் 2 ஆம் தேதி கிணற்றுக்கு சென்று பார்தபோது அவருக்கு அதிர்சி காத்திருந்தது. கிணற்றில் இருந்த தண்ணீர் வாளியில் உள்ள தண்ணீரை போல சுழன்று சுழன்று அசைந்தது. சில சமயங்களில் தண்ணீர் கரையை தாண்டி வெளியிலும் தெறித்து விழுந்தது.

எதனால் இப்படி நடக்கிறது?

இது நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நிலவியல் நிபுணர் J.S. Vadher இதற்கு விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் பெய்த கனமழையால் நிலத்தடி நீரில் அழுத்தம் மாறியிருக்கலாம். நிலத்தடி நீர் வேகமாக கீழே செல்லும்போது, பாறை இடுக்குகளில் சிக்கியிருக்கும் காற்று வெளியேற முயற்சிக்கிறது. அதனால் கிணற்றுக்குள் அலைகள் ஏற்பட்டு தண்ணீர் அசையலாம் என்று அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

https://x.com/MSRPakala/status/2085555877021659159

இருந்தாலும் இதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய நிபுணர் குழு விரைவில் அந்த இடத்தில் ஆய்வு செய்யவுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகே முழு உண்மை தெரியவரும்.

இதற்கிடையில் “அசையும் கிணறு” என்ற பெயரில் இந்த இடம் தற்போது புதிய சுற்றுலா இடமாக மாறியுள்ளது. வித்தியாசமான இந்த காட்சியை காண மக்கள் குவிந்து வருகின்றனர்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts