கிருஷ்ணகிரியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!
கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 7:
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (08.08.2026, சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் Ashok Leyland, Ola Electric, Titan Company, TVS Motor Company உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
8-ஆம் வகுப்பு முதல் +2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் உயர் கல்வி முடித்தவர்கள் வரை அனைவரும் இம்முகாமில் பங்கேற்கலாம்.
மேலும், இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு, தொழில்முனைவோர் ஆலோசனை மற்றும் வங்கி கடன் வழிகாட்டுதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
வேலை தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ்குமார், இ.ஆ.ப. அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு: 04343-29198

