பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.74.58 கோடி; அதிக செலவு நார்வே பயணத்திற்கு!
புதுடெல்லி, ஆக. 7:
பிரதமர் நரேந்திர மோடியின் 2026-ஆம் ஆண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண ங்களுக்காக இதுவரை மொத்தம் ரூ.74,58,93,797 (சுமார் ரூ.74.58 கோடி) செலவிடப்பட்டுள்ளதாக மாநிலங் களவையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்ட பயணம் நார்வே நாட்டுக்கானதாகும். அந்த பயணத்திற்கு ரூ.17,46,50,390 செலவிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து:
இங்கிலாந்து – ரூ.11,92,25,938
சிவேல்ஸ் – ரூ.8,22,03,329
சுவீடன் – ரூ.6,32,90,593
மடகாஸ்கர் – ரூ.5,57,17,369
நியூசிலாந்து – ரூ.5,43,63,041
ஸ்லோவாக் குடியரசு – ரூ.4,77,43,080
இத்தாலி – ரூ.4,23,88,557
இந்தோனேசியா – ரூ.3,87,13,468
நெதர்லாந்து – ரூ.3,59,99,358
ஐக்கிய அரபு அமீரகம் – ரூ.1,97,67,864
ஆஸ்திரேலியா – ரூ.1,18,30,810
மேலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவுகள் மாறுபட்டுள்ளன. 2021-இல் ரூ.36.11 கோடி, 2022-இல் ரூ.55.82 கோடி, 2023-இல் ரூ.93.63 கோடி, 2024-இல் ரூ.109.51 கோடி மற்றும் 2025-இல் ரூ.180 கோடி செலவிடப்பட்டதாகவும், 2026-இல் இதுவரை ரூ.74.58 கோடி செலவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பு: இந்த விவரங்கள் மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப் பட்டவை.

