இண்டிகோ விமான சேவையில் பெரும் பாதிப்பு: இன்று 1,650 விமானங்களே இயக்கம்!

இண்டிகோ

நாடு முழுவதும் வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,300 விமானங்களுக்குப் பதிலாக, இன்று (டிசம்பர் 7) 1,650 இண்டிகோ விமானங்களே இயக்கப்பட்டதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று இருந்த 1,500 சேவைகளை விட இன்று சிறிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பணிநேர விதி மாற்றம் – பைலட் பற்றாக்குறை

ஆமதாபாத் விமான விபத்துக்கு பின், விமானிகளின் பணி நேர விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் இண்டிகோ நிறுவனம் புதிய விதிகளுக்கு ஏற்ப பணிநேர திட்டங்களை சரியாக அமைக்காதது பைலட் பற்றாக்குறையைக் கிளப்பியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல இண்டிகோ சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டன.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடந்த ஒரு வாரமாக பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மத்திய அரசும் இப்பிரச்சினையை தீர்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இன்றும் தொடர்ந்த ரத்துகள் — முக்கிய நகரங்களில் நிலை

இன்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நகர வாரியான விவரம்:

  • ஹைதராபாத் – 115

  • மும்பை – 112

  • புதுடில்லி – 109

  • கோல்கட்டா – 76

  • ஆமதாபாத் – 20

  • புனே – 25

  • அகர்தலா – 6

  • திருச்சி – 11

இண்டிகோ தெரிவித்ததாவது:

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

தினசரி திட்டமிடப்பட்ட 2,300 சேவைகளில் இன்று 1,650 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று இருந்த 1,500 சேவைகளை ஒப்பிடும்போது, இன்று செயல்பாடு அதிகரித்துள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts