விளம்பரம்:


‘சூர்யா 47’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்… மிரட்டலான இயக்குநரின் புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா 47

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் எக்கச்சக்கமாக காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு வெளியீடு என எதிர்பார்க்கப்பட்டாலும், அது நடைபெறாமல் விட்டது. தற்போது, படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரையரங்குகளை அடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் ‘சூர்யா 46’. வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

விளம்பரம்:


2024-ல் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல இந்திய திரைப்படங்களில் ஒன்று ‘ஆவேசம்’. ஜித்து மாதவன் இயக்கிய அந்த படத்தை ரசிகர்கள் பெருமையாக கொண்டாடினர். இதே இயக்குநர் தற்போது சூர்யாவுடன் இணைந்து ‘சூர்யா 47’ திரைப்படத்தை இயக்குகிறார்.

இத்தகைய பெரிய கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக பிரபலமான சுஷின் ஷாம் பணியாற்றுகிறார்.

இன்று, இந்த பிரமாண்ட படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்:


விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts