விளம்பர நாடகங்களே திமுக அரசின் சாதனையா? – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி!

நயினார் நாகேந்திரன்

மாநிலத்தின் உண்மையான பிரச்சினைகளை தவிர்த்து, “நாடு போற்றும் நல்லாட்சி” என விளம்பர நிகழ்ச்சிகளையே நடத்துவதுதான் திமுக அரசின் ஒரே சாதனையா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 தேர்தல் வாக்குறுதி எண் 376-ல், ஆண்டுதோறும் குறைந்தது 100 நாள் சட்டசபையை நடத்துவோம் என கூறினீர்கள். இன்று அது எங்கே போனது முதல்வர் ஸ்டாலின்? என்று வினவியுள்ளார். தமிழக மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய சட்டசபை, வருடத்திற்கு 40 நாட்களுக்குக் கூட, கூடாத நிலை உள்ளது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

சட்டசபை நேரடி ஒளிபரப்பு வாக்குறுதி என்ன ஆனது?

  • நாடாளுமன்றத்தைப் போல சட்டசபை அமர்வுகளையும் நேரடியாக ஒளிபரப்புவோம் என்ற வாக்குறுதி (எண் 375) கொடுத்து, இன்று எதிர்க்கட்சியினர் பேசுவதை மறைத்தும் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்வது எப்படிப்பட்ட ஜனநாயகம்?

  • எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டாலே பயப்படும் நிலையில், சட்டசபை அமர்வுகளைத் தாமதப்படுத்தும் திமுக அரசு, பாகுபாடின்றி மக்களுக்கு எப்படி சேவை செய்யும்?

மக்கள் மீண்டும் திமுகவை ஆட்சிக்கு அனுப்பமாட்டார்கள்

  • தலைவிரித்தாடும் பிரச்சினைகளுக்கான பதில் சொல்லத் துணிவில்லாமல், விளம்பர அரசியல் நடத்தும் திமுகவைக் மக்கள் மறுபடியும் ஆட்சிக்கு அனுப்ப மாட்டார்கள். இது உறுதி என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts