தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்துவந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதியப் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.
இவர் தற்போது நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருந்து வருகிறார். புதியப் பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்க உள்ளதையொட்டி, அவரும், சங்கர் ஜிவாலும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
டிஜிபி நியமன நடைமுறை
டிஜிபி ஓய்வு பெறுகிறார் என்றால், 3 மாதங்களுக்கு முன்பே பரிந்துரைப் பட்டியலை மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) அதைப் பரிசீலனை செய்து, அதில் 3 பேரை பரிந்துரைக்கும்.
அதன் பின்னர் மாநில அரசு அதில் ஒருவரைத் தேர்வு செய்து டிஜிபியாக நியமிக்கும்.
ஆனால் இந்த நடைமுறையில் தற்போது தாமதம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கும் தொடரப்பட்டு, அது தள்ளுபடியானது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களும் புதிய டிஜிபி நியமனம் ஏன் தாமதமாகிறது என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் தான் தற்போது, புதிய டிஜிபி நியமனம் வெளிவரும் வரை வெங்கடராமன் பொறுப்பு வகிக்க இருக்கிறார்.

