உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான வலியை (Toxic Relationship) அனுபவித்ததாக அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘narcissistic abuse’ எனப்படும் மனரீதியான கொடுமையை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலில் அன்பு… பின்னர் முழு கட்டுப்பாடு
ஆரம்பத்தில் மிகவும் அன்பாகவும், கவர்ச்சியாகவும் நடந்து கொண்டு, பின்னர் படிப்படியாக தன்னை கட்டுப்படுத்தத் தொடங்கியதாக அனுபமா தெரிவித்துள்ளார். உடை, சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களிலும் தலையீடு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
3 மாதத்திலேயே நிச்சயதார்த்த பேச்சு
காதல் தொடங்கிய சில மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் குறித்து பேசப்பட்டதாகவும், அதை தான் திசை திருப்பியதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் திருமணம் நடந்து, பின்னர் விவாகரத்து வரை சென்றிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளே ‘டிராகன்’ படத்தின் புரமோஷனில் தான் பங்கேற்காததற்குக் காரணம் என அனுபமா தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் அந்நியன்… மறுநாள் ரெமோ
தனது அனுபவத்தை விவரித்த அனுபமா, ஒருநாள் அதிகமாக அன்பு காட்டி ‘ரெமோ’ போல இருப்பவரே மறுநாள் முற்றிலும் அந்நியராக மாறிவிடுவார் எனக் கூறியுள்ளார். பின்னர் மன்னிப்பு கேட்டு மீண்டும் அன்பாக நடந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

