Inverter அருகே இந்த 7 பொருட்களை வைக்காதீங்க! தீ விபத்தை தவிர்க்க முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்

Inverter

வீடுகளில் மின்தடை நேரங்களில் பயன்படும் முக்கிய சாதனங்களில் Inverter-ம் ஒன்று.

Inverter  மற்றும் பேட்டரியைச் சுற்றி பொருட்களை அலட்சியமாக வைப்பது வெப்பம் அதிகரித்தல், மின்கசிவு மற்றும் தீ விபத்து போன்ற அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, இன்வெர்ட்டர் வைக்கப்பட்டுள்ள பகுதியை எப்போதும் பாதுகாப்பாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருப்பது அவசியம்.

1. காகிதங்கள், அட்டைப் பெட்டிகள்

செய்தித்தாள்கள், ஆவணங்கள், கார்ட்போர்டு பெட்டிகள் போன்றவை எளிதில் தீப்பற்றக்கூடியவை. எனவே இவற்றை இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிக்கு அருகில் குவித்து வைக்கக் கூடாது.

2. துணிகள் மற்றும் திரைச்சீலைகள்

பழைய துணிகள், துண்டுகள் அல்லது திரைச்சீலைகள் இன்வெர்ட்டரின் காற்றோட்டத்தை தடுக்கலாம். இதனால் சாதனம் அதிகமாக சூடாகும் அபாயம் உள்ளது.

3. எரிபொருட்கள்

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பெயிண்ட் தின்னர் உள்ளிட்ட எரியக்கூடிய திரவங்களை இன்வெர்ட்டர் அருகில் வைப்பது ஆபத்தானது. மின்கசிவு அல்லது தீப்பொறி ஏற்பட்டால் தீ வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.

4. LPG சிலிண்டர்

இன்வெர்ட்டர் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரை ஒரே பகுதியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மின்கசிவு அல்லது தீப்பொறி ஏற்பட்டால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

5. ஏரோசல் ஸ்ப்ரேக்கள்

ரூம் ஃபிரெஷ்னர், பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே, டியோடரண்ட் போன்ற அழுத்தம் கொண்ட ஸ்ப்ரே பாட்டில்களை இன்வெர்ட்டருக்கு அருகில் வைக்க வேண்டாம். அதிக வெப்பம் ஏற்பட்டால் இவை ஆபத்தாக மாறலாம்.

6. மரப்பெட்டிகள் மற்றும் சேமிப்பு பொருட்கள்

இன்வெர்ட்டரைச் சுற்றி மரப்பெட்டிகள், ஸ்டோரேஜ் பாக்ஸ்கள் அல்லது வீட்டு பொருட்களை அடுக்கி வைப்பது காற்றோட்டத்தை குறைக்கும். இதனால் சாதனத்தின் வெப்பம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

7. தண்ணீர் மற்றும் ஈரமான பொருட்கள்

தண்ணீர் கேன்கள், வாளிகள் மற்றும் ஈரமான துணிகளை இன்வெர்ட்டர் அருகில் வைக்கக் கூடாது. ஈரப்பதம் மின் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி மின்கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம்.

Inverter-ரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Inverter உலர்ந்த, திறந்த மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைப்பது நல்லது. மூடிய அலமாரிக்குள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், பேட்டரி இணைப்புகள் மற்றும் வயர்களை அவ்வப்போது பரிசோதித்து, சேதம் இருந்தால் தகுதியான எலக்ட்ரீஷியன் மூலம் சரிசெய்ய வேண்டும். இன்வெர்ட்டரின் மேல் பொருட்களை வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

முடிந்தவரை Inverter சரியான மின் இணைப்பில் பயன்படுத்த வேண்டும். அதிக வெப்பம் அல்லது மின்சார கோளாறு ஏற்பட்டால், உடனடியாக சாதனத்தை அணைத்து நிபுணரின் உதவியைப் பெறுவது பாதுகாப்பானது.

வீட்டில் Inverter பயன்படுத்துபவர்கள் அதன் சுற்றுப்புறத்தை தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருப்பது விபத்துகளைத் தவிர்க்க உதவும்.

உங்கள் கருத்து?

Related Posts