உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த புதிய இயக்குநரகம் – தமிழக அரசு நடவடிக்கை

New Directorate

 தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 436 தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஊரக வளர்ச்சிக்கு 8 முக்கியத் திட்டங்கள்

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இதன் ஒரு பகுதியாக, அனைவருக்கும் குடிநீர் மற்றும் வீட்டு வசதி, தரமான சாலைகள், அனைத்து ஊராட்சிகளையும் இணைக்கும் சாலை வசதி, ஊரக வேலை உறுதித் திட்டம், 5,000 கிராமங்களில் நகர்ப்புற கட்டமைப்பு, கிராமப்புற தொழில் உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற சந்தைகள் உள்ளிட்ட 8 முக்கியத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கிராமங்களில் அதிகரிக்கும் சவால்கள்

பெருநகரங்களை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சி, குடியிருப்புகளின் விரிவாக்கம் மற்றும் விவசாய நிலங்களின் பயன்பாடு மாற்றம் காரணமாக மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர், சாலை, வடிகால், திடக்கழிவு மேலாண்மை மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை நிர்வகிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

புதிய நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம்

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், நகர்ப்புறத் தன்மை பெற்ற கிராமப்புற பகுதிகளின் நிர்வாகத்தை மேம்படுத்த *நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம்* புதிதாக உருவாக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர்த்து, மாநிலத்தின் 36 மாவட்டங்களில் உள்ள 4,923 கிராம ஊராட்சிகளில் 673 ஊராட்சிகள் நகர்ப்புறத் தன்மை கொண்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

4,490 புதிய பணியிடங்கள்

இந்த ஊராட்சிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்த மாநிலம் முதல் கிராம ஊராட்சி வரையிலான பல்வேறு நிலைகளில் மொத்தம் 4,490 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன்படி, மாநில அளவில் 99, மாவட்ட அளவில் 767, ஊராட்சி ஒன்றிய அளவில் 738, கிராம ஊராட்சி அளவில் 2,886 பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

ஆண்டுக்கு ரூ.107 கோடி ஒதுக்கீடு

புதிய பணியிடங்களுக்கான செலவினமாக ஆண்டுதோறும் ரூ.107 கோடியை தமிழக அரசு ஒதுக்க உள்ளது. மேலும், துறை அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக ரூ.2.4 கோடி மதிப்பில் 20 வாகனங்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊராட்சி நிதியில் இருந்து ரூ.16.55 கோடி

கிராம ஊராட்சி அளவில் உருவாக்கப்படும் 2,886 பணியிடங்களுக்கான ரூ.16.55 கோடி செலவினத்தை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் நிதியில் இருந்து மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts