வாட்ஸ்அப்பில் புதிய ‘Bill Payments’ வசதி: இனி மின்சாரம், கேஸ் பில் எல்லாம் ஒரே இடத்தில் செலுத்தலாம்!

WhatsApp Bill Payments: இனி மின்சாரம், கேஸ் பில் எல்லாம் ஒரே இடத்தில் செலுத்தலாம்!

புதுடெல்லி: இந்தியாவில் வாட்ஸ்அப் பயனர்களுக்காக புதிய ‘Bill Payments’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சாரம், சமையல் எரிவாயு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக் கட்டணங்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தே செலுத்த முடியும்.

30-க்கும் மேற்பட்ட வகையான பில்களை செலுத்தலாம்

பாரத் கணெக்ட் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படும் இந்த புதிய வசதி மூலம் 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 22,722-க்கும் அதிகமான சேவை வழங்குநர்களின் கட்டணங்களை செலுத்த முடியும்.

விளம்பரம்:

மின்சாரம், எரிவாயு, குடிநீர் மட்டுமின்றி FASTag ரீசார்ஜ், காப்பீட்டுத் தவணை, கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணம் உள்ளிட்டவற்றையும் வாட்ஸ்அப் மூலம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ்அப்பின் முகப்புத் திரையில் மேல்பகுதியில் உள்ள ₹ (ரூபாய்) குறியீட்டை தொட வேண்டும்.

அதன்பிறகு தேவையான சேவை வழங்குநரைத் தேர்வு செய்து, கணக்கு விவரங்களை உள்ளிட வேண்டும். பில் தொகை திரையில் காட்டப்பட்டதும், UPI, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

விளம்பரம்:

பழைய பில் விவரங்களையும் பார்க்கலாம்

புதிய வசதியில் ஏற்கனவே செலுத்திய பில்களின் விவரங்களைப் பார்ப்பதுடன், வரவிருக்கும் கட்டண நிலுவைகளையும் கண்காணிக்க முடியும்.

மேலும், ஒரே சேவை வழங்குநரின் கீழ் வீடு, அலுவலகம் என பல்வேறு கணக்குகளைச் சேர்த்து நிர்வகிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

படிப்படியாக அறிமுகம்

இந்த ‘Bill Payments’ வசதி தற்போது இந்தியாவில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து Android மற்றும் iOS பயனர்களுக்கும் இந்த வசதி முழுமையாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts