மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் புதிய கடல்நீர் குடிநீராக்கும் திட்டம்!

Desalination Plant

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில், மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் (400 MLD) கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் திறன் கொண்ட இந்த ஆலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இந்தத் திட்டத்தின் மூலம் வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் அதிகரிக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விளம்பரம்:

இதனுடன், ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மற்றும் கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 பழைய கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்கும் பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ.410 கோடி மதிப்பிலான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த அறிவிப்புகள் மூலம் சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதுடன், எதிர்கால குடிநீர் தேவையையும் சமாளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts