Toxic | 5 நாட்களில் ரூ.285 கோடியை கடந்த ‘டாக்ஸிக்’ வசூல் !!

Toxic

உலகளவில் வேகமாக அதிகரிக்கும் வசூல்

யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக் (Toxic ): ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே உலகளவில் ரூ.285 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் மூலம் படம் ரூ.300 கோடி வசூல் இலக்கை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் ரூ.200 கோடியை கடந்தது

கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் இந்தியாவில் 5 நாட்களில் ரூ.200 கோடிக்கும் அதிகமான நிகர வசூலை பதிவு செய்துள்ளது. 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தியாவில் சுமார் ரூ.23 கோடி வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்திய நிகர வசூல் சுமார் ரூ.214 கோடியை எட்டியுள்ளது.

முதல் நாளில் பிரம்மாண்ட ஓபனிங்

‘டாக்ஸிக்’ திரைப்படம் முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் ரூ.101 கோடி நிகர வசூலை பதிவு செய்து வலுவான தொடக்கத்தைப் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தினசரி வசூலில் படிப்படியான சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தி பதிப்புக்கு நல்ல வரவேற்பு

படத்தின் மொத்த வசூலில் இந்தி பதிப்பு முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னடம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் வெளியானதால், வட இந்தியாவிலும் படத்துக்கு கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ரூ.285 கோடியை கடந்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் விரைவில் ரூ.300 கோடி உலகளாவிய வசூல் மைல்கல்லை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

உங்கள் கருத்து?

Related Posts