காதலரை கரம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ நடிகை வினுஷா தேவி !

Vinusha devi

Vinusha Devi Marriage: பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை இன்று திருமணம் செய்துகொண்டார்.

வினுஷா தேவி முதலில் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் சின்னத்திரையில் அறிமுகமாகி, ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கினார். தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா 2’ தொடரிலும் நடித்தார். மேலும் ‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

இதற்கிடையில், தனது நீண்டகால காதலரான லிங்கேஸ்வரனை சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு வினுஷா அறிமுகப்படுத்தினார். கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், இன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வினுஷா தேவி – லிங்கேஸ்வரன் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்தைத் தொடர்ந்து வினுஷா தேவிக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து?

Related Posts