“தினசரி ரொக்கத்தை பதிவேட்டில் பதிவு செய்யணும்!” – வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டரின் அதிரடி சுற்றறிக்கை!

AntiBribery: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டரின் அதிரடி சுற்றறிக்கை!

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலைத் தடுக்கும் விதமாக, ஊழியர்கள் தங்களது தினசரி ரொக்கப் பணப் பதிவேட்டைப் (Cash Register) பராமரிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் பிறப்பித்த உத்தரவு வைரலாகி வருகிறது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு & பின்னணி

சமீபத்தில் அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்தது.

  • பண வரம்பு நிபந்தனை: டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்குத் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரும் ரொக்கப் பணத்திற்கு குறிப்பிட்ட வரம்பு (Limit) நிர்ணயிக்க வேண்டும்.

  • அரசுக்கு அவகாசம்: இது தொடர்பாகத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அரசு தரப்பில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் தெளிவுபடுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி கலெக்டர் பிரதாப் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தச் சூழ்நிலையில்தான், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏற்கனவே பிறப்பித்த சுற்றறிக்கை தற்போது மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று, தமிழகம் முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது.

  1. தினசரி ரொக்கப் பதிவேடு பராமரிப்பு: அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களின் சொந்தக் கையிருப்பில் உள்ள ரொக்கப் பணத்தின் விவரத்தை தினசரி பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

  2. வருகைப் பதிவேட்டுடன் இணைப்பு: இந்த ரொக்கப் பதிவேடு, வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்துப் பராமரிக்கப்பட வேண்டும். தினமும் அலுவலக தலைவரிடம் (Office Head) ஒப்புதல் பெற்று, கண்காணிப்பாளரால் பாதுகாக்கப்பட வேண்டும்.

  3. மாதம் இருமுறை ஆய்வு: உயர் அதிகாரிகள் மாதம் இரண்டு முறை இந்த ரொக்கப் பணப் பதிவேட்டை நேரில் ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும்.

  4. தேவைக்கு அதிகமான ரொக்கம் தவிர்க்கப்பட வேண்டும்: அரசு ஊழியர்கள் தேவையில்லாமல் அதிக அளவு ரொக்கப் பணத்தை அலுவலகத்திற்கு எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.

விதிகளை மீறினால் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை!

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதால், இனி சுற்றறிக்கையைப் பின்பற்றத் தவறும் அலுவலகங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • யார் மீது நடவடிக்கை?: பதிவேட்டைப் பராமரிக்காத அலுவலகத்தின் தலைவர் (Head of Office), கண்காணிப்பாளர் (Superintendent), மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் ஆகிய மூவர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து?

Related Posts