Seed Ganesha Idols | விதை விநாயகர் சிலையை வழிபடுங்கள்: நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்

Seed Ganesha Idols

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை (Seed Ganesha Idols) பயன்படுத்துமாறு நடிகர் சிரஞ்சீவி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விதைகளால் உருவான விநாயகர் சிலை

விளம்பரம்:

‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு விதைகளை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை

நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, விதைகளால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்தார். வீட்டில் வைத்து வழிபாடு செய்த பிறகு, சிலையை தண்ணீரில் கரைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

விளம்பரம்:

சிலை கரைந்த பிறகு செடிகளாகும் விதைகள்

விநாயகர் சிலையை கரைக்கும் போது, அதற்குள் இருக்கும் விதைகள் மண்ணில் சேர்ந்து பின்னர் செடிகளாக வளர வாய்ப்புள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் இயற்கை பாதுகாப்பையும் இணைக்க முடியும் என சிரஞ்சீவி குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்போது சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அனைவரும் விதை விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும் என்று சிரஞ்சீவி கேட்டுக்கொண்டார்.

20 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டதாக தகவல்

இதனிடையே, ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் இதுவரை சுமார் 20 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts