சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சென்னை: தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டு சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விளம்பரம்:

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களின் போது பாரம்பரியமாக நடைபெறும் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டிகள் நடத்தப்படுவதாகவும், சேவல் சண்டையில் விலங்குகளை துன்புறுத்தும் நோக்கமோ அல்லது சூதாட்ட நோக்கமோ இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபிக்கு என்ன அதிகாரம்?

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

விளம்பரம்:

மேலும், காவல்துறைக்கு பல்வேறு முக்கிய பணிகள் இருக்கும்போது, எங்கு ஆடு சண்டை, சேவல் சண்டை நடைபெறுகிறது என்பதை கண்காணிப்பதுதான் காவல்துறையின் பணியா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அரசுத் தரப்பில், மிருகவதை தடுப்புச் சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த மனுவுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம், டிஜிபி மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு அடுத்ததாக செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts