நடிகை த்ரிஷாவிற்கு லண்டனிலும் ஒரு வீடு இருக்கா? வைரலாகும் புகைப்படங்கள்!

Trisha

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கிருஷ்ணன் தற்போது லண்டனில் இருப்பது வெளியாகியுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. லண்டன் நகரில் தனது தோழிகளுடன் நடிகை த்ரிஷா இயல்பாக பொழுதை கழிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

லண்டனில் உள்ள ஒரு கடையின் வெளியே தோழிகளுடன் த்ரிஷா அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் அவரை அடையாளம் கண்டுள்ளார். உடனடியாக த்ரிஷாவை வீடியோவாக பதிவு செய்த அந்த ரசிகை, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

விளம்பரம்:

 

இந்த வீடியோவுக்கு த்ரிஷா நடித்த ‘கில்லி’ படத்தின் பாடலை இணைத்து பதிவிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள், த்ரிஷாவை நேரில் பார்த்தபோதும் அவரது தனிப்பட்ட நேரத்தை மதித்து செல்ஃபி எடுக்க முயற்சிக்காத அந்த ரசிகையை பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்:

மேலும், வீடியோவில் த்ரிஷா மிகவும் கேஷுவலாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக த்ரிஷா சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இல்லாத நிலையில், அவரது லண்டன் பயணம் குறித்த இந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லண்டனிலும் த்ரிஷாவுக்கு வீடு?

த்ரிஷா சென்னையைத் தவிர ஹைதராபாத் மற்றும் லண்டனிலும் சொத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள வீட்டை தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கச் செல்லும் போது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. லண்டன் வீட்டின் மதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு தொடர்பாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

த்ரிஷாவின் அடுத்தடுத்த படங்கள்

திரைப்படங்களைப் பொறுத்தவரை, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மோகன்ராஜ் இயக்கும் புதிய படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இதனுடன், தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கவுள்ள வெப் தொடரிலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், லண்டன் பயணத்தின் வீடியோ மட்டுமின்றி, த்ரிஷாவின் அடுத்தடுத்த சினிமா படைப்புகள் குறித்த தகவல்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts