விளம்பரம்:


TN Rain : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

TN Rain

TN Rain | தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வழியாக சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருவதால் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


TN Rain | இன்று மழைக்கு வாய்ப்பு

இன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யலாம்.

விளம்பரம்:


அடுத்தடுத்த நாட்களில் மழை

செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 11ஆம் தேதி கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 12ஆம் தேதி மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யலாம்.

செப்டம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 15ஆம் தேதி வடகடலோர தமிழகத்திலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts