விளம்பரம்:


தொப்பை குறையாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா? தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்கள் !

Belly fat

Belly Fat: உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு மட்டும் குறையாமல் இருப்பது பலருக்கும் கவலையாக உள்ளது. இதற்கு உணவுப் பழக்கம் மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கை முறையும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

அதிக கலோரி உணவுகள்

விளம்பரம்:


உடற்பயிற்சி செய்தாலும், அதிக கலோரி மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது எடை குறைப்பு முயற்சிக்கு தடையாக அமையலாம். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட பானங்களை கட்டுப்படுத்துவது அவசியம்.

உடற்பயிற்சி மட்டும் போதாது

தொப்பையை மட்டும் குறைக்க குறிப்பிட்ட ஒரு உடற்பயிற்சியை செய்வது போதுமானதாக இருக்காது. ஒட்டுமொத்த உடல் கொழுப்பை குறைக்க சரியான உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இரண்டும் அவசியம்.

விளம்பரம்:


தூக்கமின்மையும் ஒரு காரணம்

போதுமான தூக்கம் இல்லாதது உடல் எடை நிர்வாகத்தையும் பாதிக்கலாம். எனவே தினசரி சீரான தூக்கத்தை கடைப்பிடிப்பது முக்கியம்.

மன அழுத்தத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்

தொடர்ச்சியான மன அழுத்தம் உணவுப் பழக்கத்திலும் உடல் எடை நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பொறுமை அவசியம்

தொப்பை கொழுப்பு குறைவதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தவிர்க்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் தொடர்ந்து மாற்றங்களை மேற்கொள்வதே நீண்ட காலத்தில் உதவும்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts