பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகள் காரணமாக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சில முக்கிய தொலைதூர ரயில்களின் பாதையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2026-ல் குறிப்பிட்ட நாட்களில் சென்னை, கோவை, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. இதனால் சில முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
1. மும்பை – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
ரயில் எண்: 22159
செப்டம்பர் 19 முதல் 23 வரை மற்றும் அக்டோபர் 4-ம் தேதி இந்த ரயில் கல்யாண், இகத்புரி, மன்மாட், தவுண்ட் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் கர்ஜத், லோனாவாலா, கத்கி, புனே ஆகிய நிலையங்களில் நிறுத்தம் இருக்காது.
2. நாகர்கோவில் – லோக்மான்ய திலக் டெர்மினஸ்
ரயில் எண்: 16340
செப்டம்பர் 22 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் இந்த ரயில் சோலாப்பூர், குருதுவாடி, தவுண்ட், அகல்யாநகர், மன்மாட், நாசிக், கல்யாண் வழியாக இயக்கப்படும். புனே நிலையத்தில் நிற்காது.
3. சென்னை சென்ட்ரல் – லோக்மான்ய திலக் டெர்மினஸ்
ரயில் எண்: 12164
அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் செல்லும் இந்த ரயில் புனே மற்றும் லோனாவாலா நிலையங்களில் நிறுத்தம் இல்லாமல் இயக்கப்படும்.
4. லோக்மான்ய திலக் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண்: 11013
அக்டோபர் 3-ம் தேதி புனே, சதாரா, மிராஜ், பாண்டர்பூர், குருதுவாடி, சோலாப்பூர் வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
5. திருவனந்தபுரம் – லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ்
ரயில் எண்: 16332
அக்டோபர் 3-ம் தேதி தவுண்ட், அகல்யாநகர், மன்மாட், இகத்புரி, கல்யாண் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
6. கோயம்புத்தூர் – லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ்
ரயில் எண்: 11014
அக்டோபர் 3-ம் தேதி தவுண்ட், அகல்யாநகர், மன்மாட், இகத்புரி, கல்யாண் வழியாக ரயில் இயக்கப்பட உள்ளது.
பயணிகளுக்கு முக்கிய அறிவுரை
பாதை மாற்றம் காரணமாக சில ரயில்கள் வழக்கத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே பயணிகள் முன்கூட்டியே ரயில் இயக்கம் மற்றும் நிறுத்தங்கள் தொடர்பான தகவல்களை சரிபார்த்து பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.

