சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள் !

Viral Fever

சென்னையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பருவநிலை தொடர்ந்து மாறி வருவதால் காய்ச்சல், சளி மற்றும் சுவாசப் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளுடன் பொதுமக்கள் பலர் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.

பருவநிலை மாற்றம் முக்கிய காரணம்

விளம்பரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் என வானிலை மாறி வருகிறது. ஒருபுறம் வெயிலும் மறுபுறம் மழையும் தொடர்வதால் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 என்னென்ன அறிகுறிகள்?

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலைவலி, தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி மற்றும் தொடர்ந்து தும்மல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. சிலருக்கு உணவு மீது விருப்பம் குறைவதுடன், வாயில் கசப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:

5 நாட்கள் வரை நீடிக்கலாம்

இந்த காய்ச்சல் சிலருக்கு சுமார் 5 நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எச்1என்1 தொற்று குறித்து அறிவுரை

திருவள்ளூர் மாவட்ட மனநல மற்றும் சுகாதார இயக்குனரும் குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் எஸ்.எம். பதூர் மொய்தீன் கூறுகையில், எச்1என்1 வைரஸ் பாதிப்பு ஒருவரிடம் ஏற்பட்டால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் எளிதில் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், மற்றவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களும் பாதிப்பு

இந்த வைரஸ் காய்ச்சலால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாலை நேரங்களில் மருத்துவமனைகள் மற்றும் புறநகர் கிளினிக்குகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts