கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை: குற்றாலம் கிளி ஜோதிடர் கைது!

கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை: குற்றாலம் கிளி ஜோதிடர் கைது

சென்னை: கனடாவைச் சேர்ந்த பெண்ணிடம் வீடியோ கால் மூலம் நிர்வாண பூஜை செய்ததாகக் கூறி, அவரது ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றச்சாட்டில் கிளி ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்திருந்தார். ஜோதிடத்தில் ஆர்வம் கொண்ட இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஜோதிடம் தொடர்பாக பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்:

பெசன்ட் நகர் கடற்கரையில் அறிமுகம்

சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்ற அந்தப் பெண், அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஜோதிடம் பார்க்கச் சென்றுள்ளார்.

அப்போது அந்த ஜோதிடர், அந்தப் பெண்ணை ஏற்கெனவே தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பதாகவும், அவர் ஜோதிடம் குறித்து நன்றாகப் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் கூறுவதைப் பின்பற்றினால் வாழ்க்கையில் மேலும் உயர முடியும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.

அத்துடன், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து அவர் துல்லியமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் ஜோதிடரை நம்பத் தொடங்கியுள்ளார்.

விளம்பரம்:

வீடியோ கால் மூலம் நிர்வாண பூஜை

இதனைத் தொடர்ந்து, நிர்வாண பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும் என்றும், வீடியோ கால் மூலமாகவே அந்தப் பூஜையை நடத்த முடியும் என்றும் ஜோதிடர் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய அந்தப் பெண், ஜோதிடர் கூறிய பொருள்களை வாங்கி வைத்து, வீடியோ கால் மூலம் பூஜையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த பூஜைக்காக ஜோதிடர் அந்தப் பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் பெற்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்

பூஜை முடிந்த பின்னர், அந்தப் பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜோதிடர், வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதல் பணம் தர வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கிளி ஜோதிடர் கைது

புகாரின் அடிப்படையில், ஜோதிடரை அவரது செல்போன் எண்ணை வைத்து போலீஸார் அடையாளம் கண்டனர். விசாரணையில், அவர் குற்றாலம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் இசக்கி முத்துவை கைது செய்தனர்.

மேலும், இதேபோன்று அவர் வேறு பெண்களையும் மிரட்டி வீடியோ எடுத்துள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts