சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப். 4) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் மிதமான மழை

தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்நிலை வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

விளம்பரம்:

சென்னையில் மாலை, இரவில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்

உள் தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை செப்டம்பர் 7-ஆம் தேதி வரை சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சியில் 103.1 டிகிரி, தஞ்சாவூர் மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 102.2 டிகிரி, ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

விளம்பரம்:

கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மதுரை மாவட்டம் திருவாதவூர், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மற்றும் வாலாஜா ஆகிய பகுதிகளில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஆற்காட்டில் 40 மி.மீ. மழையும், ஏற்காடு, மதுராந்தகம், மாமல்லபுரம், செய்யூர், வெம்பாக்கம், ஆரணி மற்றும் சிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தலா 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts