மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி!

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

விளம்பரம்:

அதில், தமிழ்நாட்டில் ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட விளையாட்டுத் துறைகளுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் நன்றி

முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகர் அஜித்குமார், தமிழ்நாடு அரசின் விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித்குமார் கூறியதாவது:

விளம்பரம்:

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மூலம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான கவனம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான ஒரு மாபெரும் பாய்ச்சல்” என நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற கூற்றை மாற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த அஜித்குமார், மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் விளையாட்டு முன்னெடுப்புகள் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கார் பந்தயத்தில் அஜித்குமார்

அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆத்விக் இயக்கத்தில், தனது மனைவி ஷாலினி தயாரிப்பில் உருவாகும் ‘டேர் டெவில்’ திரைப்படத்திலும் அஜித்குமார் நடித்து வருகிறார்.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts