விளம்பரம்:


முதல்-அமைச்சரின் உருவக் கேலி பேச்சு பொறுப்பற்ற செயல்: பெ.சண்முகம் !

CM’s Body Shaming;

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அளித்த பதிலுரை குறித்து கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியை குறிவைத்து குற்றச்சாட்டுகள்

விளம்பரம்:


அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில்கள் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளார். மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு பதிலாக, பதிலுரை முழுவதும் எதிர்க்கட்சியை குறிவைக்கும் குற்றச்சாட்டுகளாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் குறித்து விமர்சனம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஜனநாயக அமைப்புகள் இருப்பதாகக் கூறிய பெ.சண்முகம், அமலாக்கத்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பொருத்தமானது அல்ல என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:


உருவக் கேலிக்கு கண்டனம்

அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரால் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யார் உருவக் கேலி செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்றும், முதல்-அமைச்சரே இதுபோன்று பேசியிருப்பது பொறுப்பற்ற செயல் என்றும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டசபை மக்கள் பிரச்சினைகளுக்கான இடமாக இருக்க வேண்டும்

சட்டசபையை தனிநபர் தாக்குதல்களுக்கும், தலைவர்களைப் பாராட்டுவதற்குமான இடமாக மாற்றக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, சட்டசபையின் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts