விளம்பரம்:


சுங்கச்சாவடிகளில் இனி காத்திருக்க வேண்டாம்: அக்டோபர் முதல் புதிய நடைமுறை

Barrier-Free

Barrier-Free Toll plaza: தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 3 முக்கிய சுங்கச்சாவடிகளில், வரும் அக்டோபர் முதல் தடுப்புகள் இல்லாத தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் தொடர்ந்து பயணிக்க முடியும்.

FASTag-க்கு அடுத்தகட்ட மாற்றம்

விளம்பரம்:


தற்போது FASTag மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தப்பட்டாலும், சுங்கச்சாவடிகளில் உள்ள தடுப்புகளை கடக்க வாகனங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டியுள்ளது. புதிய முறையில், வாகனங்களை அடையாளம் காணும் கேமராக்கள் மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

நெரிசல் குறையும்

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருப்பது குறைவதால், பயண நேரம் மிச்சமாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த புதிய நடைமுறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்:


எரிபொருள் விரயமும் குறையும்

சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதால் ஏற்படும் எரிபொருள் விரயம் மற்றும் காற்று மாசுபாட்டையும் குறைக்க முடியும். வாகனங்கள் தடையின்றி தொடர்ந்து செல்வதால் நெடுஞ்சாலைப் பயணம் மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக 3 சுங்கச்சாவடிகள்

இந்த புதிய Barrier-Free Toll Collection முறை பரனூர், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நேமிலி, வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் ஆகிய 3 சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் செயல்பாடு வெற்றிகரமாக இருந்தால், எதிர்காலத்தில் மேலும் பல சுங்கச்சாவடிகளுக்கு இந்த முறை விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளத

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts