Nani’s The Paradise: நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி
நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் முன்னதாக வெளியான ‘தசரா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் தான் ‘தி பாரடைஸ்’.
இந்தப் படத்தில் நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கயாடு லோஹர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் பிரம்மாண்ட படம்
எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
1980-களின் பின்னணியில் கதை
1980-களின் செகந்திராபாத் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வெளியான டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனத்தில் இடம்பெற்ற பாடலும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
செப்டம்பர் 23-ல் சிறப்புக் காட்சி
‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகும் நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு, அதாவது செப்டம்பர் 23-ம் தேதி சிறப்புக் காட்சி திரையிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

