விளம்பரம்:


இனி மின்கட்டணம் செலுத்த வேண்டாம்! சூரிய மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற சத்தீஸ்கர் கிராமம்

சூரிய மின்சார கிராமம் இனி மின்கட்டணம் செலுத்த வேண்டாம்! சூரிய மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற சத்தீஸ்கர் கிராமம்

141 வீடுகளிலும் சோலார் பேனல்கள்; 282 கிலோவாட் மின் உற்பத்தி – மக்களின் மின்சாரச் செலவு பூஜ்ஜியம்!

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதில் மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, சத்தீஸ்கர் மாநிலத்தின் கைரா கிராமம் முழுமையான சூரிய மின்சாரக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது.

ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில், வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்களின் மின்சாரக் கட்டணச் சுமை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


141 வீடுகளிலும் சோலார் பேனல்கள்

கைரா கிராமத்தில் சுமார் 889 பேர் வசித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 141 வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளின் கூரைகளிலும் தலா 2 கிலோவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் கிராமத்தின் மொத்த சூரிய மின்சார உற்பத்தித் திறன் 282 கிலோவாட்டாக உயர்ந்துள்ளது. வீடுகளின் அன்றாட மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கிராம மக்களுக்கு செலவு இல்லை!

இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம், சோலார் பேனல்கள் பொருத்துவதற்காக கிராம மக்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவிடவில்லை என்பதாகும்.

விளம்பரம்:


மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் மற்றும் பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் கிடைத்த மானியங்களுடன், மீதமுள்ள தொகையை நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

உபரி மின்சாரம் மின் கட்டமைப்புக்கு!

வீடுகளின் பயன்பாட்டுக்குப் போக மீதமிருக்கும் மின்சாரத்தை நெட் மீட்டரிங் தொழில்நுட்பம் மூலம் மாநில மின் கட்டமைப்புக்கு அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன், உபரி மின்சாரத்தையும் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும்.

சூரிய மின்சாரத்தை நோக்கி இந்தியா

குஜராத் மாநிலத்தின் மோதேரா கிராமம் 2022-ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் முதல் 24 மணி நேர சூரிய மின்சாரக் கிராமமாக அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் வீடுகள் மற்றும் அரசு கட்டடங்களில் 1,300-க்கும் மேற்பட்ட சூரிய மின்சார அமைப்புகள் நிறுவப்பட்டன.

இந்த நிலையில், சத்தீஸ்கரின் கைரா கிராமத்தில் 141 வீடுகளுக்கும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ள திட்டம், கிராமப்புறங்களில் சூரிய மின்சாரப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு முயற்சியாக அமைந்துள்ளது.

மின்சாரச் செலவைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கும் இதுபோன்ற திட்டங்கள் உதவுகின்றன.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts