விளம்பரம்:


சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

1a702fbd b1ff 48d8 bf41 9013872471cb சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

ஐப்பசி பூரம் உற்சவத்தை முன்னிட்டு திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் – பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் ஐப்பசி பூரம் உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விளம்பரம்:


இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அக்டோபர் 26-ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா

சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிவகங்கை குளத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பூரம் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த அக்டோபர் 26-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளம்பரம்:


நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர்

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. கீழரத வீதியில் உள்ள தேரடி நிலையிலிருந்து புறப்பட்ட அம்மன் தேர், தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து மீண்டும் கீழரத வீதியில் உள்ள தேர் நிலையை அடைந்தது.

அப்போது ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

தொடர்ந்து நடைபெறும் சிறப்பு வழிபாடுகள்

தேரோட்டத்தைத் தொடர்ந்து மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அம்மனுக்கு லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

நவம்பர் 4-ம் தேதி பட்டு வாங்கும் உற்சவம், பூரச்சலங்கை உற்சவம், உற்சவ அம்மனுக்கு மகாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெறுகின்றன.

நவம்பர் 5-ம் தேதி இரவு ஸ்ரீ சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts