விளம்பரம்:


நவம்பர் 1 ஏன் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது? 1956 முதல் 2026 வரை நடந்த வரலாறு!

தமிழ்நாடு நாள் வரலாறும் பெருமையும் நவம்பர் 1 ஏன் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது? 1956 முதல் 2026 வரை நடந்த வரலாறு!

நவம்பர் 1 ஏன் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது? 1956 முதல் 2026 வரை நடந்த வரலாறு!

நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட நாள், கன்னியாகுமரி மாவட்டம் உருவான வரலாறு, தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம் என இந்த நாளுக்குப் பின்னால் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.

நவம்பர் 1 – தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டது ஏன்?

இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி புதிய மாநில எல்லைகள் நடைமுறைக்கு வந்தன.

விளம்பரம்:


மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன் அடிப்படையில் சென்னை மாகாணத்தின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. இதன் மூலம் தற்போதைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு உருவானது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட 2019-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் உருவான வரலாறு!

1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பின்போது திருவிதாங்கூர் – கொச்சி மாநிலத்திலிருந்து ஐந்து தென் தாலுகாக்கள் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன.

விளம்பரம்:


அவற்றில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

செங்கோட்டை தாலுகாவும் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

அதே நேரத்தில் மலபார் பகுதி கேரளத்துடனும், கன்னட மொழி பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்துடனும் இணைக்கப்பட்டன.

தமிழ்நாடு என்ற பெயர் உருவானது எப்படி?

1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புக்குப் பிறகும் சென்னை மாகாணம் என்ற பெயரே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது.

1938-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் மறைமலையடிகள், பெரியார் ஈ.வெ.ரா., சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை எழுப்பினர்.

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானமும் தமிழ் மாநிலம் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப் போராட்டம்!

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

76 நாள்கள் தொடர்ந்து போராடிய அவர் உயிரிழந்தார். அவரது தியாகம் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்கு மேலும் வலுசேர்த்தது.

1967 ஜூலை 18 – தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்!

1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தை ஜூலை 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

இதனைத் தொடர்ந்து 1968 நவம்பர் 23-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.

1969 ஜனவரி 14-ஆம் தேதி முதல் சென்னை மாகாணம் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஜூலை 18 அல்லது நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் விவாதம்!

தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டிய தேதி குறித்து பல ஆண்டுகளாக விவாதம் இருந்து வருகிறது.

  • நவம்பர் 1, 1956: மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட நாள். இதனை தமிழ்நாடு நாளாக 2019-ல் அதிமுக அரசு அறிவித்தது.
  • ஜூலை 18, 1967: சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாள்.

2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீண்டும் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டின் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம் ஆகிய இரு வரலாற்று நிகழ்வுகளின் முக்கியத்துவமும் மீண்டும் கவனத்திற்கு வந்துள்

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts