விளம்பரம்:


விஜய்யைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரபாபு நாயுடு!

புயல் பாதிப்பில் ஆந்திரா–தமிழ்நாடு அழைப்பு விஜய்யைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரபாபு நாயுடு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தால் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகள் சேதமடைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

விளம்பரம்:


மின்துறைப் பணியாளர்கள், இயந்திரங்கள் அனுப்பக் கோரிக்கை

புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்தால், மின் விநியோகத்தை விரைவாகச் சீரமைக்கத் தேவையான பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களைத் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக, மின்சாரக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளில் அனுபவம் கொண்ட மின்துறைப் பணியாளர்களின் உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உதவி வழங்க விஜய் உறுதி

சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைக்குத் தமிழக முதல்வர் விஜய் சாதகமாகப் பதிலளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் மின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்பி உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

விளம்பரம்:


இதுகுறித்த தகவலை ஆந்திர முதல்வர் அலுவலகம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வரிடமும் உதவி கோரிக்கை

இதற்கிடையே, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரிடமும் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.

ஏற்கெனவே ‘அர்னாப்’ புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திரப் பகுதிகளில் மின் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணியில் தெலங்கானா மாநில மின்துறைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

‘முரசு’ புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள அண்டை மாநிலங்களின் உதவியுடன் முன்கூட்டியே பணியாளர்கள் மற்றும் உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts