விளம்பரம்:


கல்லறைத் திருநாள்: முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை!

All Souls Day Prayers in a Flower Filled Cemetery கல்லறைத் திருநாள்: முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை!

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2-ஆம் தேதி அனுசரிக்கப்படும் கல்லறைத் திருநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னோர்களின் கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இறந்துபோன தங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்களை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் கல்லறைகளைச் சுத்தம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.

விளம்பரம்:


கல்லறைகளை அலங்கரித்து அஞ்சலி

கல்லறைத் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைச் சுத்தம் செய்து, வர்ணம் பூசி, மலர்களால் அலங்கரித்தனர்.

தொடர்ந்து அந்தந்தப் பகுதி தேவாலயங்களின் பங்குத் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கல்லறைகள் புனிதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்:


திண்டுக்கல் மைக்கேல் பாளையத்தில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம் மைக்கேல் பாளையத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

தொண்டியில் சிறப்பு திருப்பலி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கல்லறைத் திருநாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. தொண்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் அதிகாலையில் பங்குத் தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் தொண்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அப்பகுதியில் உள்ள கல்லறைகளிலும் சிறப்பு திருப்பலியும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

காரங்காடு புனித செங்கோல் மாதா திருத்தலத்தில் பங்குத் தந்தை ரெஞ்ஜீஸ் தலைமையிலும், சம்பை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பங்குத் தந்தையர்கள் செல்வராஜ், பாக்கியராஜ் ஆகியோர் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

இதில் சம்பை, கண்கொள்ளான் பட்டிணம், சின்ன மடம் தோப்பு, சோழியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதும், அவர்களின் நினைவுகளைப் போற்றுவதும் கல்லறைத் திருநாளின் முக்கிய நோக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts