Seeman Joins Seyon: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளார். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் யார்?
மதுரை மண்ணின் பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட கிராமத்து கமர்ஷியல் கதையாக படம் உருவாகி வருகிறது‘தாய் கிழவி’ திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன், ‘சேயோன்’ படத்தை இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
முக்கிய நட்சத்திரங்கள்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். பால சரவணன், அருள்தாஸ் மற்றும் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, முக்கிய ஆக்ஷன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சீமான்?
இந்நிலையில், படத்தில் சீமான் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சீமான் விரைவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சீமான் படக்குழுவில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘எல்ஐகே’ திரைப்படத்திலும் சீமான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

