தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! ஆக.18, 19-ல் Rain Alert

Rain Alert

தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ம் தேதிகளில் Rain Alert  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 18-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain Alert | ஆக.17-ல் எங்கெல்லாம் மழை?

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இதர தமிழகப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆக.18-ல் 2 மாவட்டங்களுக்கு கனமழை

ஆகஸ்ட் 18-ம் தேதி **செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்** ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழையும், இதர பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக.19-ல் மேலும் சில மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

ஆகஸ்ட் 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 17-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவு

தமிழகத்தில் காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் **4 செ.மீ. மழை** பதிவாகியுள்ளது.

இளையான்குடி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், கறம்பக்குடி, நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts