புதுடெல்லி:
கூகுள்-பே, போன்-பே போன்ற செயலிகளின் மூலம் செயல்படும் யூனிஃபைடெட் பேமன்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) முறையில், இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஒரே நாளில் 70.7 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
விளம்பரம்:
செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
இந்த தகவலை இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உறுதி செய்துள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் UPI பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
இது, இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சி பாதையில் ஒரு முக்கியக் கட்டத்தை நெருங்கி இருப்பதை உணர்த்துகிறது.

