ஆகஸ்ட் 28-ல் மேட்டூர் அணை திறப்பு? முதல்வர் விஜய் பங்கேற்க ஏற்பாடுகள் தீவிரம்

Mettur Dam

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நீர்வளத்துறை மற்றும் காவல்துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேட்டூர் அணை (Mettur Dam) மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளைச் சேர்ந்த 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை

வழக்கமாக காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் அந்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நீர்மட்டம் 90 அடியை எட்டுகிறது

தற்போது பருவமழை காரணமாக கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 26 காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.84 அடியாக இருந்த நிலையில், மறுநாள் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

92-வது ஆண்டாக பாசனத்துக்கு தண்ணீர்

நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 92-வது ஆண்டாக தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல்வர் விஜய் மேட்டூர் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முதல்வர் வருகையை முன்னிட்டு அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகு பகுதியில் மின்விசை அமைத்தல், பந்தல் மற்றும் மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி நேரில் ஆய்வு செய்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள தகவல் டெல்டா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts