கேரள மாணவிக்கு ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டம்; 2-ம் இடம் பிடித்த தமிழகத்தின் வைஷ்ணவி

Kaziah

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026  அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் கேரளாவைச் சேர்ந்த 19 வயதான கசியா லிஸ் மேஜோ (Kaziah Liz Mejo)  வெற்றி பெற்று பட்டத்தைத் தட்டிச் சென்றார். சட்டம் பயிலும் மாணவியான இவர், மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்டவர்.

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வைஷ்ணவி

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் ஆக தேர்வாகி 2-ம் இடத்தைப் பிடித்தார். மேலும், வைஷ்ணவிக்கு ‘மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026’ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.

கேரளாவுக்கு புதிய சாதனை

மாவேலிக்கராவைச் சேர்ந்த கசியா லிஸ் மேஜோ, தேசிய அளவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற முதல் கேரளப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுள்ள கசியா, வரும் நவம்பர் மாதம் பியூர்டோ ரிக்கோவில் நடைபெற உள்ள 75-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில்* பங்கேற்க உள்ளார்.

19 வயதிலேயே தேசிய அழகிப் பட்டத்தை வென்ற கசியா லிஸ் மேஜோவும், முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்து ‘மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026’ பட்டத்தை வென்ற தமிழகத்தின் வைஷ்ணவி கணேஷும் தற்போது கவனம் பெற்றுள்ளனர்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts