100% உள்நாட்டு பாகங்களுடன் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

AK-203 ‘Sher’ Rifle

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில், முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ஏகே-203 துப்பாக்கிகளை தயாரிக்கும் நோக்கில் இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

100% இந்திய உதிரி பாகங்கள்

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த துப்பாக்கிக்கு ‘ஷெர்’ என பெயரிடப்பட்டுள்ளது. முழுமையாக இந்திய உதிரி பாகங்கள் மற்றும் உள்நாட்டு உள்ளீடுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முதல் ஏகே-203 துப்பாக்கி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு, அதன் செயல்திறனும் சோதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் ராணுவ சோதனை

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் பரிசோதனைக்காக தேவையான எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துப்பாக்கிகள் செப்டம்பர் 2026-ல் ராணுவ சோதனைக்காக ஒப்படைக்கப்பட உள்ளதாக இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.கே. சர்மா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

ஏகே-203 துப்பாக்கியின் சிறப்புகள்

ஏகே-203 என்பது 7.62×39 மி.மீ. ரகத்தைச் சேர்ந்த, கலஷ்நிகோவ் தளத்தை அடிப்படையாகக் கொண்ட துப்பாக்கியாகும். இது நிமிடத்திற்கு சுமார் 700 சுற்றுகள் சுடும் திறனையும், அதிகபட்சமாக 800 மீட்டர் வரையிலான தாக்குதல் வரம்பையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் முழுமையான உள்நாட்டு பாகங்களுடன் ஏகே-203 தயாரிக்கப்பட்டிருப்பது, நாட்டின் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts